சினிமா டிக்கெட் - கேளிக்கை வரி 2 சதவீதம் குறைப்பு?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (14:18 IST)
தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்காக வரி 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


 

 
ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருந்த வேளையில், திரைத்துறையினருக்கு 30 சதவீத கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
 
ஆனாலும், ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி என 40 சதவீதத்துக்கு மேல் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருப்பதால், தமிழக அரசு விதித்த கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சினிமா உலகினர் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டது. அரசுக்கும், சினிமா துறையினருக்கும் இடையே இது தொடர்பாக கடந்த 3 நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டு வருகிறது. 
 
சினிமா நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்