மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாத ஒன்று. பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா என்ற கேள்வி அனைவரிடமும் உண்டு. இந்நிலையில் மூளை அறுவை சிகிச்சை நிபுணர் அலெக்சாண்டர் தனது அனுபவம் குறித்து லிவ்விங் இன் ய மைண்ட்புல் யூனிவர்ஸ் என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவர் 2008ஆம் ஆண்டில் ஒருவாரம் கோமாவில் இருந்தபோது அனுபவித்ததை புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில், ஒரு ஒளி மேலிருந்து கீழே மெல்ல இறங்கி வருவதை கண்டேன். இதை நான் ஸ்பின்னிங் மெலடி எனறு அழைத்தேன் என்று கூறியுள்ளார்.