லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை..!

Webdunia
வியாழன், 11 மே 2023 (14:35 IST)
கோவையில் லாட்டரி அதிபர் மாட்டினுக்கு சொந்தமான கார்ப்பரேட் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்ட போதிலும் கேரளா உள்பட பல இந்திய மாநிலங்களில் லாட்டரி விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் லாட்டரி விற்பனையில் பெரும் பங்கு வைத்து வரும் நிலையில் அவருக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். 
 
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள மார்ட்டின் வீடு அவரது மருமகன் அலுவலகம் உள்பட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அழியார்கள் சோதனை செய்து வருவதாகவும் இன்று காலை முதல் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முடக்கப்பட்ட சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்