செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன்: எலான் மஸ்கின் சூப்பர் திட்டம்

Siva
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (11:54 IST)
செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்ப எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், 5 ஆளில்லா ஸ்டார்ஷிப் விண்கலங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்த முயற்சி வெற்றிகரமாக செயல்பட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் அங்கு மனிதர்களை அனுப்பும் திட்டமும் இருப்பதாக எலான் மஸ்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 இந்த பணிக்கு "மார்ஸ் மிஷன்" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளில்லா விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ தகுதியான சூழ்நிலை இருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்து ஆராய்ச்சிகளும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, சீனா, இந்தியா உள்பட பல நாடுகள் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், தனிமனிதர் ஒருவராக எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப திட்டமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்