’இனிதான் ஆட்டம் ஆரம்பம்?’ ட்விட்டருக்கு ரிட்டர்ன் ஆன ட்ரம்ப்!

ஞாயிறு, 20 நவம்பர் 2022 (09:07 IST)
கடந்த 2020ல் ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான தடையை நீக்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலாகவே ட்விட்டர் நிறுவன செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் பணியாளர்கள் வேலை நீக்கம், அலுவலகத்தை மூடி வைத்தது என தினம் தினம் பேசுபொருளாகி வருகிறார் எலான் மஸ்க்.

இந்நிலையில் அடுத்து ஒரு அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பொது அமைதியை குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருவதால ட்விட்டரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ட்ரம்ப்பை மீண்டும் ட்விட்டரில் இணைக்கலாமா என எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியிருந்தார். இந்த வாக்கெடுப்பில் டொனால்டு ட்ரம்ப்க்கு ஆதரவாக 52% வாக்குகள் பதிவான நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் கணக்கு மீதான தடையை நீக்குவதாக எலான் மஸ்க் அறிவ்வித்துள்ளார். இதனால் பல மாதங்கள் கழித்து மீண்டும் ட்விட்டரில் நுழைகிறார் டொனால்ட் ட்ரம்ப்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்