விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம் - தேர்தல் ஆணையம்!!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (16:45 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் நடைபெறும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில அளவிலான விளம்பரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்திடமும், மாவட்ட அளவில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்