அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா இல்லை - தேர்தல் ஆணையம் பகீர் தகவல்

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (18:38 IST)
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


 

 
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் எழுப்பிய கேள்விக்கு இந்த பதிலை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. 
 
தேர்தல் ஆணையம் கூறியுள்ள பதிலில், பொதுச்செயலாளர் விவகாரத்தில் சர்ச்சை இருப்பதால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும், சசிகலா நியமனத்தை அங்கீகரிக்கவில்லை எனவும் பதில் தெரிவித்துள்ளது.
 
இதன் மூலம் அதிமுகவில் பொதுச்செயலாளர் என தற்போது யாருமில்லை எனபது உறுதியாகியுள்ளது. தினகரனை அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என எடப்பாடி அணி இன்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், சசிகலாவின் நியமனமே செல்லாது என்கிற வகையில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
 
இது சசிகலா மற்றும் தினகரன் தரப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்