கட்சி வேட்பாளர்களுக்கு பிப்.,11 ஆம் தேதி வரை தடை- தேர்தல் ஆணையம்

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (20:54 IST)
தமிழகத்தில் இந்த 19 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில்,    மாநிலத் தேர்தல் ஆணையம் தற்போது  வேட்பாளர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.  அதில், பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழகம் முழழுவதும் கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

அதன்படி,  இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை எந்தவொரு கூட்டம் மற்றும் பிரசாரம் செய்யக்கூடாது.

மத சார்புடைய சின்னங்கள் வைத்து மக்களிடம் வாக்குகள் கேட்க அனுமதி இ ல்லை. 

சுவரொட்டி, கொடிகள்,  பிரசார பொருட்கள் போன்றவற்றிற்கு  மா நில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சமூகம் மற்றும் ஜாதி, மத அடிப்படை வகைகளைக் கேட்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், வேட்பாளர்கள் 20 ஆதரவாளர்களுடன் மட்டும் ஓட்டுக் கேட்க அனுமதி.

நோட்டீஸ்கள் பிரசாரத்திற்குப் பயன்படுத்தலாமமதை ஒட்ட அனுமதியில்லை.

கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நடத்தும் கூட்டங்களில் 50 நபர்கள் கலந்துகொள்ள அனுமதி.

திறந்தவெளியில் கூட்டம் நடத்தும்போது, 30  நபர்களுக்கு மட்டும் அனுமததி என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்