தமிழ்நாட்டில் மின்சார நுகர்வு புதிய உச்சம்- அமைச்சர் தங்கம் தென்னரசு

Sinoj

புதன், 3 ஏப்ரல் 2024 (19:06 IST)
தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை இன்று எட்டி இருக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. திமுக ஆட்சியில் மக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில்,  தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை இன்று எட்டி இருக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
’’தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை இன்று எட்டி இருக்கிறது. 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு இன்று மின்சார நுகர்வு இருந்திருக்கிறது.
 
தமிழ்நாடு முதல்அமைச்சர் அண்ணன்  மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலில், தொலைநோக்குப் பார்வை, சிறந்த திட்டமிடல், மின் உற்பத்தியை பெருக்குவதற்கு முக்கியத்துவம் என திராவிட மாடல் அரசின் சீரிய முயற்சியின் காரணமாக, மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். தொழில் துறையினர், வணிகர்கள், விவசாயப் பெருமக்கள், இல்லத்தரசிகள் எவரும் இன்னலுக்கு ஆளாகாத வகையில் மின் விநியோகம் சீராக நடந்து வருகிறது. 
 
இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்