பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? வேண்டாமா? – சட்டமன்ற பிரதிநிதிகளுடன் ஆலோசனை!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (09:05 IST)
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து இன்று சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், இரண்டு நாட்களாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் தேர்வு நடத்துவது குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.

அதை தொடர்ந்து இன்று பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து இது தொடர்பான தரவுகள் முதல்வரிடம் அளிக்கப்படும் என்றும், அதை ஆய்வு செய்து முதல்வர் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்