அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி: என்ன பிரச்சனை?

Siva
புதன், 2 அக்டோபர் 2024 (09:40 IST)
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வயிற்று வலி ஏற்பட்டதினால், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடைய உடல்நிலை முன்னேற்றமாக உள்ளதாகவும், உடல்நிலை சீரானதும் அவர் வீட்டிற்கு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்ததால், தொடர் சுற்றுப்பயணத்தின் காரணமாக உணவு அலர்ஜி ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனால் அவருக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரின் உதவியாளர்கள் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்