என் உடம்புல ஓடுறது ரத்தம் இல்ல.. சிந்தூர்..! - பிரதமர் மோடி ஆவேசம்!

Prasanth Karthick

வியாழன், 22 மே 2025 (13:53 IST)

ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயணம் செய்துள்ள பிரதமர் மோடி அங்கு இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து ஆவேசமாக பேசியுள்ளார்.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலிற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டு, பின்னர் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது.

 

அதை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் பெயருக்கு போட்டி ஏற்பட்டது. பல பட நிறுவனங்கள் அந்த பெயரை பதிவு செய்ய துடித்தன. இந்நிலையில் ஐஆர்சிடிசி தளம் தொடங்கி பல தளங்களில் ஆபரேஷன் சிந்தூர் பெயரும், மோடி படமும் அடங்கிய விளம்பரங்கள் வைரலாகி வருகின்றன. பல பகுதிகளில் பிரதமர் மோடியை ஆபரேஷன் சிந்தூரின் நாயகனாக வரித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து வீர ஆவேசமாக பேசியுள்ளார். அப்போது அவர் ”பாரத மாதாவின் சேவகனான மோடி நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாகதான் இருக்கும். ஆனால் மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடிக் கொண்டிருக்கிறது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்