டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் முக்கிய தலைவர்களான முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, "எந்த அரசியல் தலைவரையும் சந்திக்க நான் டெல்லிவரவில்லை. டெல்லியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தைக் காண வந்தேன்," என்று விளக்கம் அளித்தார்.
ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இவை அனைத்தும் தமிழக அரசியலில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துமா? என்பதற்கான பதில் விரைவில் தெரியும்,