ஐ.டி. துறையின் இணை இயக்குநர் பிரத்யுமன் தீட்சித் மனைவி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில், எந்த அலுவலகத்திற்கும் செல்லவில்லை. ஆனால், இரண்டு தனியார் நிறுவனங்களில் ஊழியராக கணக்கு காட்டப்பட்டு, அவருக்கு சம்பளமாக ₹ 37.54 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
பிரத்யுமன் தீட்சித், அரசு ஒப்பந்தங்களை பெறும் தனியார் நிறுவனங்களான ஓரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாஃப்ட்வேர் லிமிடெட் ஆகியவற்றில் தனது மனைவி பூனம் தீட்சித்தை போலியாக சேர்த்து, இரண்டு ஆண்டுகளில் ரூ.37.54 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
அரசு ஒப்பந்தங்களை பெற்றுக் கொடுப்பதற்கு பிரத்யுமன் வாங்கிய லஞ்சம் தான் இது என்று ஏ.சி.பி. சந்தேகிக்கிறது. மேலும், பூனம் தீட்சித் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து ஏ.சி.பி. தொடர்ந்து விசாரித்து வருகிறது.