திருவாரூர் விஜயம்: முதல்வரின் திடீர் விசிட்டுக்கு காரணம் என்ன?

திங்கள், 26 நவம்பர் 2018 (18:23 IST)
அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.
 
வரும் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் திரூவாரூரில் (மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் தொகுதி) நடத்தப்படும் என்றும் அதேசமயம் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் குறித்து தற்போது முடிவெடுக்க இயலாது என தேர்தல் அதிகாரி கூறியிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் செல்ல உள்ளதாக தக்வல் வெளியாகியுள்ளது. ஆம், கஜா புயலின் கோர தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. 
ஏற்கனவே, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில்  ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதனை எதிர்கட்சி தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். 
 
இதனால், தற்போது புயல் பாதித்த 13 நாட்களுக்கு பிறகு நாளை மறுநாள் நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக, நாளை இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகைக்கு செல்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்