மீளுமா தமிழகம்?? ஆண்டுதோறும் தாக்கும் புயல்கள்

சனி, 17 நவம்பர் 2018 (18:09 IST)
தமிழகத்தில் கஜா புயலின் தாக்குதல் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பலத்த சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் 46 பேர் பலியாகியுள்ளனர். 
இந்நிலையில், கடந்த 16 ஆண்டுகளில், தமிழகத்தில் புயல் தாக்குதல்கள் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், 30 அதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த ஆண்டு ஓகி புயல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர், அதற்கு முந்தைய ஆண்டு வர்தா புயல் தாக்கியதில் 24 பேர் உயிரிழந்தனர். 
இரண்டு நாடகளுக்கு முன்னர் நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை கஜா என்ற புயல் தாக்கியது. இதுபோல, 1900 முதல் 2004 ஆம் ஆண்டு வரையில் தமிழக கடலோர மாவட்டங்கள் 30 புயல் தாக்குதல்களை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
1891 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாடு ஆண்டுக்கு 0.49 என்ற அளவிற்கு புயலைச் சந்தித்தது. அதோடு, 2003 - 2018 இடைப்பட்ட காலக்கட்டத்தில் இது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, ஆண்டிற்கு 0.63 என்ற அளவிற்கு புயல் தமிழகத்தைத் தாக்குகிறது என கணக்கீடுகள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்