திருவாரூரில் வருது இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம்

திங்கள், 26 நவம்பர் 2018 (13:06 IST)
அடுத்த ஆண்டு பிரவரிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே இடைத்தேர்தல் நடத்த வேண்டுன் என வழக்கு தொடர்ந்துள்ளதால் இவ்வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. 
 
இந்நிலையில் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் திரூவாரூரில்( மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் தொகுதி) நடத்தப்படும் என்றும் அதேசமயம் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் குறித்து தற்போது முடிவெடுக்க இயலாது என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
 
இவ்வழக்கினை கேகே ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்ததால் இவ்வழக்கு  இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்