தரைமேல் பிறக்க வைத்தான்; எங்களை தண்ணீரில் தவிக்க வைத்தான்: விழாவில் பாடிய எடப்பாடி பழனிசாமி

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (12:31 IST)
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் பல ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடல் உயிரினங்களும் உயிரிழந்தன. பின்னர் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கச்சா எண்ணெய் கடலிலிருந்து வெளியேற்றினர்.


 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் விழா ஆர்.கே. நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீனவர்களுக்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்கினார். விழாவின்போது பேசிய அவர், தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் தவிக்க வைத்தான் என்று மீனவர்களுக்காக எம்ஜிஆர் பாடியது உண்மையாகி வருகிறது என்று பாடல் பாடிவிட்டு பேசினார். மேலும் ஜெயலலிதா வழியில் இந்த அரசு சிறப்பாக நடைபெறும் என்றார்.
அடுத்த கட்டுரையில்