தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் இயல்பு: எடப்பாடி பழனிசாமி

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (13:09 IST)
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாட்டாளி மக்கள் கட்சியின் இயல்பு என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்த பாமக சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. மேலும் அடுத்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது
 
இந்த நிலையில் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார், நேக்ய்ன் அதிமுக துரோகம் செய்தது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கூறியிருக்கும் நிலையில் அதிமுக என்ன துரோகம் செய்தது என்பதை ராமதாஸ் விளக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் அதிமுக - பாமக கூட்டணி முடிவடைந்ததை அடுத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்