தமிழகத்தில் முழு தளர்வா? அல்ல தளர்வுடன் கூடிய ஊரடங்கா?

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:47 IST)
நாளையோடு செப். மாத ஊரடங்கு முடியும் நிலையில் இன்று அலோசனையில் ஈடுபடவுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 7 ஆம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை அமலில் இருப்பினும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. 
 
மேலும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு மாணவர்கள் பெற்றோர்களின் விருப்பத்தின் பெயரில வரலாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு அக்டோபர் மாதம் சென்னையில் புறநகர் ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபந்தனைகளுடன் இன்று (செப் 29 ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை செய்ய உள்ளார். 
 
இந்த ஆலோசனையின் போது ஊரடங்கு மேலும் அக்டோபர் மாதம் நீட்டிக்கலாமா? அல்லது மேலும் சில தளர்வுகளை வழங்கலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்