பச்சைப் பொய் கூறி ஆட்சியில் ஏறிய ஸ்டாலின் - ஈபிஎஸ் காட்டம்

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (12:23 IST)
உள்ளாட்சி தேர்தலில் திமுக செய்யும் தில்லு முல்லுகளை முறியடித்து அதிமுகவினர் வெற்றி பெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, 
 
உள்ளாட்சி தேர்தலில் திமுக செய்யும் தில்லு முல்லுகளை முறியடித்து அதிமுகவினர் வெற்றி பெற வேண்டும். திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு விவகாரத்தில் திமுக பச்சைப் பொய்யை மக்களிடம் தெரிவித்துள்ளது.
 
திமுக தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை ஏமாற்றி வருகின்றனர். பச்சைப் பொய்யை கூறி ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்