என்னடா இது அதிசயமா இருக்கு.....ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (18:48 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் கோரிக்கையை எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டது.

 
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு குறித்து இன்று தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
 
வெகு நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
 
அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திக்க வேண்டும்.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
 
177.25 டிஎம்சி தண்ணீரை அதிகரிக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
இதில் அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்