பயங்கர ஆயுதங்களுடன் பயணித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது

வியாழன், 22 பிப்ரவரி 2018 (17:59 IST)
சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 6பேரை போலீசார் கைது செய்தனர்.
 
வியாசர்பாடிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் மாணவர்கள் ஆயுதத்துடன் பயணிப்பதாக போலீசார்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றபோது மணிகண்டன், சுதாகரன், மோகன், மலர்மன்னன், வசந்தகுமார், விக்கி ஆகிய 6 மாணவர்களை கைது செய்தனர்.
 
போலீசார் மாணவர்களை கைது செய்து விசாரித்த போது அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எனவும், மாநில கல்லூரி மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலால் அவர்கள் ஆயுதங்கள் எடுத்து சென்றதாக விசாரணையில் தெரிவித்தனர்.
 
இதே போல சமீபத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள்களுடன் ரெயிலில் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்