ராஜன் செல்லப்பா பரபரப்பு பேட்டி – பதறிய முதல்வர் விளக்கம் !

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (14:32 IST)
அதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராஜன் செல்லப்பா இன்று அளித்த பேட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் முதல்வர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக வின் முக்கியத் தலைவர்களில் மதுரை ராஜன் செல்லப்பாவும் ஒருவர். இன்று செய்தியாளர்களை சந்தித்த் அவர் அதிமுகவின் தோல்வி குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதில் ‘ அதிமுகவுக்கு ஒரேத் தலைமை தேவை. யார் கையில் அதிகாரம் உள்ளது என்றே தெரியவில்லை. ஜெயலலிதா போல் கழகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம்.

இதனால் அதிமுகவில் கோஷ்டிப் பூசல் உருவாகி இருப்பதாக சலசலப்புகள் எழுந்தன. இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டபோது ‘நான் இன்னும் அவரின் பேச்சைக் கேட்கவில்லை. இது கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதிமுகவில் கோஷ்டி பூசல் இருப்பதாகக் கூறுவது தவறான தகவல். எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்தான் அவ்வாறு கூறி வருகின்றன.’ எனக் கூறி நழுவிச் சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்