கோயம்பேடு தடியடி காரணம் என்ன ? – எடப்பாடி மழுப்பல் பதில் !

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (14:24 IST)
தேர்தலுக்கு முதல் நாளன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதுமான பேருந்து வசதிகள் செய்து கொடுக்காததால் ஏற்பட்ட குழப்பத்துக்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் செல்ல சென்னை கோயம்பேட்டில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். ஆனால் கூடுதல் கட்டணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி 1 அல்லது 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வருவதால் காலைக்குள் எப்படி ஊருக்கு சென்று வாக்களிப்பது என்றும் பயணிகள் அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் தேர்தலை அடுத்து 3 நாட்களுக்கு விடுமுறை தினம் என்பதால் அதிகப் பயணிகள் ஊருக்கு செல்வதற்காக போதுமான வசதிகள் செய்துத்தராததால் பயணிகள் அங்கு பேருந்துகளை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து மக்களைக் கலைக்க போலிஸ் தடியடி நடத்தினர். அதையடுத்து பொதுமக்கள் கிடைத்த பஸ்களின் மேற்கூரைகளில் தொற்றிக்கொண்டு பயணம் செய்தனர். இதையடுத்து மக்களை வாக்களிக்க விடாமல் செய்ததாகக் கூறி விமர்சனம் எழுந்தன. அதையடுத்து இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘ஏற்கனவே இயக்கப்பட்ட பேருந்துகள் அந்த வழிகளில் இயக்கப்பட்டன. உடனடியாகக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படமுடியாது. அரசின் செயல்பாடுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம்தான் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் ஊருக்கு திரும்புவதற்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்ர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்