தேர்தலை சந்திக்க தயார் –எடப்பாடி பழனிச்சாமி கருத்து

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (12:30 IST)
18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் சரியான முடிவுதான என்று மூன்றாவது நீதிபதி சத்யநாராயணாவின் தீர்ப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இன்று வெளியான தீர்ப்பில் ‘18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. எனவே தகுதிநீக்கம் செல்லும் மற்றும் தகுதிநீக்கத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து தினகரன் பாதகமான தீர்ப்பு குறித்து ’இந்த தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை. அரசியலில் எல்லாமே அனுபவம்தான். தீர்ப்பு குறித்து 18 உறுப்பினர்களோடும் விவாதித்த பின்பு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ மழுப்பலான பதிலைக் கூறியிருக்கிறார்.

தங்களுக்கு சாதகமான தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி ‘புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்களின் நல்லாசி மற்றும் இறையருளால் இந்த தீர்ப்புக் கிடைத்துள்ளது. ஏற்கனவே உள்ள 2 தொகுதிகளையும் சேர்த்து தற்போது மொத்தம் 20 தொகுதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் காலியாகியுள்ளது. இந்த தொகுதிகளில் எப்போது தேர்தல் நடந்தாலும் அதிமுக எதிர்கொள்ள தயாராக உள்ளது. 20 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும்.’ என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்