அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை: திடீரென சொந்த ஊருக்கு சென்ற ஈபிஎஸ்!

வியாழன், 16 ஜூன் 2022 (10:15 IST)
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை நடந்து வரும் நிலையில் திடீரென அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில ஆண்டுகளாக ஓபிஎஸ் இபிஎஸ் என இரட்டை தலைமையில் இயங்கி வருகிறது. ஆனால் இக்கட்சி ஒற்றை தலைமையில் இயங்க வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது 
 
இந்த நிலையில் ஒற்றை தலைமையை ஏற்பது யார் என்ற போட்டி உருவாகி வரும் நிலையில் ஓபிஎஸ் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் திடீரென அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். சென்னை கிரீன்வேஸ் சாலையின் இல்லத்தில் இருந்து இன்று காலை அவர் தனது குடும்பத்துடன் சேலத்துக்கு சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்