செந்தில் பாலாஜி சகோதரர் மனைவி கட்டி வரும் வீடு முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!

புதன், 9 ஆகஸ்ட் 2023 (20:21 IST)
கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் மனைவி கட்டி வரும் வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி விட்டதாக கூறப்படுகிறது. 
 
கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி பல கோடி ரூபாயில் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த வீட்டை இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் சோதனையின் முடிவில் அந்த வீட்டை முடக்கி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
கரூர் புறவழி சாலையில் சுமார் 2 ஏக்கரில் அசோக்குமார் மனைவி கட்டி வரும் புதிய வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் அவரது விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்