அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் கட்டும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!

புதன், 9 ஆகஸ்ட் 2023 (14:25 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து தற்போது ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரது சகோதரர் அசோக்குமார் கரூரில் கட்டி வரும் பங்களாவில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சற்று முன் சோதனை செய்ய வந்ததாகவும் அசோக் குமார் தனது மனைவி பெயரில் இந்த வீடு கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
 இரண்டு வாகனங்களில் இந்த பங்களாவை சோதனை செய்ய அதிகாரிகள் வந்ததாகவும் அவர்களுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னையில் ஒரு பக்கம் விறுவிறுப்பாக செந்தில் பாலாஜி இடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் கரூரில் அவரது சகோதரர் கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்