ஏடிஎம்-இல் நிரப்ப எடுத்து சென்ற பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்

செவ்வாய், 12 மார்ச் 2019 (21:55 IST)
தேர்தல் அறிவித்துவிட்டால் தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரம் வந்துவிடும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பேதமின்றி அனைத்து தரப்பினர்களும் தேர்தல் அதிகாரிகளுக்கு அஞ்சி நடக்கும் காலம் இந்த இரண்டு மாதம் காலம்தான்
 
அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் உண்மையாகவே பிசினஸ் செய்பவர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கும் ஆபத்து நேர்வதுண்டு. உரிய ஆவணம் இல்லையென்றால் அப்பாவி பிசினஸ்மேன்களின் பணமும் இந்த அதிகாரிகளிடம் சிக்கும் சம்பவங்கள் பல நடந்துள்ளது.
 
இந்த நிலையில் உதகையில் ஏ.டி.எம். இயந்திரத்துக்கு பணம் நிரம்ப எடுத்து சென்ற வேன் ஒன்றில் இருந்து பறக்கும்படை அதிகாரிகள் ரூ.76 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஏடிஎம்-இல் பணம் நிரப்ப சென்ற வேன் டிரைவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை இந்த பணத்தை பறிமுதல் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. ஏடிஎம்-இல் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணத்திற்கே இந்த கதியென்றால் அப்பாவிகளின் பணம் சிக்கினால் என்ன ஆகும் என்பதை நினைத்து பார்க்கவே காமெடியாக உள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் ஆர்.கே.நகர் தேர்தலின்போது ரூ.20 டோக்கன் கொடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது யார் என்பது உலகத்திற்கே தெரியும். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் மற்றவர்களிடம் கெடுபிடி காட்டுவது சரிதானா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்