பணம் தருகிறேன் ஓட்டு போடுங்கள்: பாஜக தலைவரின் பேச்சால் கடும் சர்ச்சை

புதன், 6 மார்ச் 2019 (11:00 IST)
மராட்டிய பாஜக தலைவர் பணம் தருகிறேன் ஓட்டு போடுங்கள் என கூறியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாஜக அமைச்சர்கள் ஆகட்டும் சரி தலைவர்கள் ஆகட்டும் சரி அவ்வப்போது ஏடாகுடமாக  பேசி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.
 
இந்நிலையில் மராட்டிய பாஜக தலைவர் ராவ்சாகேப் தன்வே பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், மோடிக்கு எதிராக திருடர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். அவர்களை வீழ்த்த வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும். நான் உங்களுக்கு பணம் தருகிறேன் என கூறினார்.
 
இதனால் அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இவரது பேச்சு வெளியாகி பலர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்