பிரசன்னாவின் குற்றச்சாட்டு கண்டிக்கத்தக்கது: மின்வாரியம் விளக்கம்

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (20:07 IST)
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த நான்கு மாதங்களாக மின்வாரிய கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாதங்களாக முந்தைய மாத மின்கட்டணம் செலுத்த வேண்டும் என மின் வாரியம் அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில் தற்போது நான்கு மாதத்திற்கும் மொத்தமாக மின்கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதால் மிக அதிகமாக மின்கட்டணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பதாகவும் மின்வாரியம் கொள்ளை அடிப்பதாக எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார் இதனால் மின் வாரியம் அதிர்ச்சி அடைந்து பிரசன்னாவின் வீட்டில் மீண்டும் மின் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும் அதில் தவறு இருந்தால் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் தற்போது மின் வாரியம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும், நான்கு மாத மின்நுகர்வை இரண்டாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும் மின்வாரியம் பதில் அளித்துள்ளது. மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியத்தை கடுஞ்சொற்களால் குற்றஞ்சாட்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்வாரியத்தின் இந்த பதிலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்