சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள்; பூமியில் வெப்பம் அதிகரிக்கும்! – விஞ்ஞானிகள் தகவல்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (08:51 IST)
சூரியனில் அதிகமான கரும்புள்ளிகள் தோன்றி வருவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனில் ஏற்படும் வெடிப்புகளால் உருவாகும் சூரிய காந்த புயல்கள் பூமியை தாக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நேற்று கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையம் ஒரே நாளில் சூரிய காந்த புயல்கள் 8 முறை பூமியை தாக்கியதாக தெரிவித்திருந்தனர்.

மேலும், சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் கரும்புள்ளிகளால் சூரிய காந்த புயல்கள் உருவாகும் நிலையில் தற்போது சூரியனில் அதிகளவிலான கரும்புள்ளிகள் தோன்றுவதாக கூறியுள்ளனர். இதனால் வரும் நாட்களில் பூமியில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்