2 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (07:25 IST)
2 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
அதிமுகவின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் என அதிரடியாக சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் சி விஜய் பாஸ்கர் ஆகியோர் வீடுகளில் மற்றும் அவர்களுக்கு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
எஸ் பி வேலுமணி தொடர்புடைய 16 இடங்களிலும், சி விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாகவும் சோதனையின் முடிவில் தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்