பொதுமக்களின் செல்போன்களில் அவசர எச்சரிக்கைகள்.. பேரிடர் மேலாண்மை திட்டம்..!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (16:59 IST)
பேரிடர்களின் போது அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை அக்டோபர் 20ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாக  பேரிடர் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புயல், வெள்ளம் போன்ற சோதனைக் காலத்தில், பொதுமக்களின் செல்போன்களில் அவசர எச்சரிக்கைகள் பெறப்படும் என்றும், இந்த விழிப்பூட்டல்கள் திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என்றும், உண்மையான அவசரநிலையை குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது;

இந்த சோதனை ஓட்டத்தால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என  பேரிடர் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்