இந்த நிலையில் இது குறித்து தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறியபோது, கர்நாடகாவுக்கு அண்டை மாநிலங்களுடன் நட்புறவைப் பேணும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார். கர்நாடக துணை முதல்வர் பதவி ஏற்றவுடன் தனது பொறுப்பான பணிகளை டிகே சிவகுமார் செய்வார் என்று நினைத்தோம். ஆனால் அவர் மேகதாது அணை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.