ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

Siva

ஞாயிறு, 20 ஜூலை 2025 (08:29 IST)
ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்றும், நாளையும் மூடப்படும் என உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
தென் இந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், எட்டாவது மைல், ட்ரீ பார்க், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தங்கள் திட்டங்களை மாற்றியமைத்து, ஊட்டிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
மேலும், ஊட்டியில் இன்று காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், சுற்றுலா தலங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்