கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரத்துக்கு மேலான நிலையில் அந்த மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க முடியாமல் சிக்கலில் இருந்தது என்பதும் குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் குழப்பம் இருந்தது என்பதையும் பார்த்தோம்.
ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் கர்நாடக மாநிலத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.