கடந்த 2022 ஆம் ஆண்டு, HCL நிறுவனத்தின் ரூ.200 கோடி மற்றும் தமிழக அரசின் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி செலவில் திருக்கோயில் முழுவதும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளின் ஒரு பகுதியாக வள்ளி குகையும் புதுப்பிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றதை தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட வள்ளி குகையிலும் தற்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குகையின் உள்ளே, வள்ளி முருகன் புராணத்தை சித்தரிக்கும் ஓவியங்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு பிறகு வள்ளி குகை சீரமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த குகைக்குச் சென்று வருகின்றனர்.