30 மாதங்கள் தான்.. காங்கிரஸ் தலைமைக்கு கெடு விதித்தாரா டிகே சிவகுமார்?

வியாழன், 18 மே 2023 (13:41 IST)
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரும் போட்டி போட்ட நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னால் சித்தராமையா தான் முதலமைச்சர் என அறிவிக்கப்பட்டது. மேலும் டி.கே. சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் டி கே சிவகுமார் முதல்வர் பதவியை எப்படி விட்டுக் கொடுத்தார் என்பதற்கு சில காரணங்கள் தெரியவந்துள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்ய இருக்கும் ஐந்து வருடங்களில் இரண்டரை வருடங்கள் அதாவது 30 மாதங்கள் மட்டுமே சித்தராமையா முதலமைச்சராக இருக்க வேண்டும் என்றும் அடுத்த முப்பது மாதங்களுக்கு தன்னை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததை அடுத்து டி கே சிவகுமார் இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் இதை பொதுவெளியில் சொன்னால் பிரச்சனை ஏற்படும் என்பதால் காங்கிரஸ் கட்சியை நிர்வாகத்திற்குள் இதை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இரண்டரை ஆண்டுகள் கழித்து டி.கே. சிவகுமார் கர்நாடக மாநில முதலமைச்சர் ஆக பதவி ஏற்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்