சென்னையில் வயிற்று வலியால் தீக்குளித்த பெண்

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (08:30 IST)
சென்னை அருகே வயிற்று வலியால் விரத்தி அடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.


 

 
சென்னை திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மனோகரன் என்பவரின் மனைவி லோகேஸ்வரி கடந்த 2 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று முந்தினம் நண்பகல் வீட்டில் தனியாக இருந்த லோகேஸ்வரி மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். தீக்குளிக்கும் போது அலறிய லோகேஸ்வரியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த லோகேஸ்வரியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தீராத நோயால் அவதிப்படுபவர்களை கருணை கொலை செய்வது உண்டு. ஆனால் தீராத வயிற்று வலியால் விரத்தி அடைந்து தானே தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்