தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை: எந்தெந்த நாட்களில் தெரியுமா?

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (07:06 IST)
தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
தெற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் அதன் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை வரை அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்