தமிழ் நாட்டில் 2022-2023 ஆம் ஆண்டு கனவு இல்லத் திட்டத்திற்கு எழுத்தாளர்கள் தேர்வு

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (20:42 IST)
தமிழ் நாட்டில், மத்திய மற்றும்  மாநில அரசின் விருதுகள்  பெற்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கலைஞரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத்திட்டம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த அறிவிப்பின்படி, 2021-2022 ஆம் ஆண்டிற்காக கனவு இல்லத் திட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது மற்றும் கலைஞர் விருது பெற்ற மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன், சாகித்ய அகாதமி விருது பெற்றவரும் கவிஞருமான புவியரசு,  பூமணி, கு. மோகனராசு, இமயம்,  ஆகிய 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு,  அவர்களுக்கு தமிழ் நாட்டு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஆணைகள் கடந்த ஜூனில் வழங்கினார்.

ALSO READ: ரூ.70,000 கோடி செலவில் புதிய திட்டம் - தமிழ் நாடு அரசு அறிவிப்பு

இந்த நிலையில், 2022-2023 ஆம் ஆண்டிற்காக கனவு இல்ல வீட்டு திட்டத்திற்கு,  சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களான,  ஜி. திலகவதி.  கோதண்டராமன்,  சு வெங்கடேசன், மருத நாயகம், எஸ்.ராமகிருஷ்ணன், கா.ராஜன், ஆர்.என்.ஜோ.டி. குரூஸ், வண்ணதாசன் உள்ளிட்ட 10 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்