விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறதா - பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம்

Siva
திங்கள், 13 மே 2024 (13:49 IST)
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறதா என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார் என்பதும், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில் அதன் பின்னர் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்