ஜெ. இறப்பில் சந்தேகம்: தொலைபேசி இணைப்பை துண்டித்த பிரபலம்!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (10:01 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரபல நடிகை கௌதமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவர் அப்படியொரு கடிதமே எழுதவில்லை என்ற தகவல்கள் வருகின்றன.


 
 
நடிகை கௌதமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதால் அதனை மத்திய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியிருந்தார். கடிதத்துக்கு பதில் வரவில்லை என்று மீண்டும் நினைவூட்டல் கடிதமும் எழுதியாக கூறியிருந்தார்.
 
அதன் நகலும் கொடுக்கப்பட்டது அனைத்து ஊடகங்களும் அதனை செய்தியாக வெளியிட்டது. இந்நிலையில் தீபக் என்ற இளைஞர் உண்மையில் கௌதமி கடிதம் அனுப்பினாரா என்பதை தெரிந்துகொள்ள கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் நடிகை கௌதமி அனுப்பிய கடித நகல் கோரி மனு செய்யப்பட்டது.

 

 
 
இதற்கு கடந்த ஜனவரி 27-ஆம் தேதியில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில் NO INFORMATION AVAILABLE ON RECORDS என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் கௌதமி பொய் கூறினாரா அல்லது தவறான முகவரிக்கு கடிதம் அனுப்பினாரா, எந்த நாட்டு பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினார் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்த தகவலை பெற்ற தீபக் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
 
இதனையடுத்து பிரபல தனியார் செய்தி நாழிதள் நடிகை கௌதமியை தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவர் தொலைப்பேசி இணைப்பு துண்டித்துவிட்டதாகவும், குறுந்தகவல் அனுப்பியும் எந்த விளக்கமும் தரவில்லை என்று கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்