அதிமுகவை சீண்ட வேண்டாம்: நாங்கள் யாருக்கும் அடிமையல்ல- எடப்பாடி பழனிசாமி

வெள்ளி, 16 ஜூன் 2023 (13:42 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து. தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  நேற்று (15.06 2023)  காணொளி வாயிலாக கருத்து தெரிவித்து, பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், அதிமுக பாஜகவின் அடிமை என்று கூறியிருந்தார்.

முதல்வர் முக ஸ்டாலின் நேற்று வெளியிட்ட கருத்திற்கு இன்று அதிமுக பொதுச் செயலாளரும் முன்னால் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி   காணொளி வாயிலாக வெளியிட்ட பதிலுரை வெளியிட்டுள்ளார்.

அதில், செந்தில் பாலாஜிக்கு பரிந்து பேசுகிறார். முதல்வர் முக ஸ்டாலின், பதற்றத்தோடு பேசுகிறார்.  இப்பதற்றத்திற்கு என்ன காரணம்?

அதிமுகவை முதல்வர் சீண்டிப் பார்க்க கூடாது. இந்த ஊழலுக்கு கூட்டணிக் கட்சிகள் துணைபோக வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக பாஜகவின் அடிமை என்று முதல்வர் கூறுகிறார். இவர்கள் 1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் திமுகவினர் இடம்பெற்றார்களா இல்லையா? அதிமுகவினர் எந்தக் கட்சிக்கும் அடிமையானவர்கள் அல்ல. சொந்தக் காலில் நின்று மக்களுக்காகப் பாடுபடுபவர்கள்.  அதிமுகவை எந்தக் காலத்திலும் உங்களால் ஒன்றும் பண்ண முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (15.06 2023) மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று ( 16 06 2023) கழகப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி @EPSTamilNadu அவர்கள் காணொளி வாயிலாக வெளியிட்ட பதிலுரை pic.twitter.com/TeiRh9a9aD

— AIADMK (@AIADMKOfficial) June 16, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்