மனித உரிமை ஆணைய உறுப்பினர் அறிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது: அதிமுக வழக்கறிஞர்

வியாழன், 15 ஜூன் 2023 (15:34 IST)
மனித உரிமை ஆணையர் கண்ணதாசனின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நியமனமே தவறு என்றும்  அவரது அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்றும் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
 
செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ரவி மற்றும் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மேலும் தெரிவித்துள்ளார். 
 
மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் திமுகவின் அனுதாபி என்றும் அவர் திமுகவுக்கு ஆதரவாக பல தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர் என்றும் அவரது அறிக்கை திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் பலர் கூறிவரும் நிலையில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் அதே கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்