அமலாக்கத்துறைக்கு செல்லும் ரூ.30,000 கோடி பிடிஆர் ஆடியோ விவகாரம்: பரபரப்பு தகவல்..!

வெள்ளி, 16 ஜூன் 2023 (11:29 IST)
சமீபத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ரூ.30,000  கோடி குறித்து பேசியதாக வெளிவந்த வீடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை விசாரணை செய்ய வேண்டும் என அதிமுக அரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது அவர் பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ வைரல் ஆனது. இந்த ஆடியோ குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை விசாரணை செய்ய வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார். 
 
மேலும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, மத்திய நிதி அமைச்சர் ஆகியோர்களுக்கும் இந்த மனுவை அவர் அளித்துள்ளார். இந்த ஆடியோ விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆடியோவில் பதிவான குரல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரல் இல்லை எனும் பட்சத்தில் அந்த குரலை பதிவு செய்தது யார் என்பது குறித்து கண்டுபிடிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்