400 கார்களுடன் புடைசூழ காங்கிரஸில் இணைந்த பாஜக பிரமுகர்

வியாழன், 15 ஜூன் 2023 (17:02 IST)
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி 400 கார்களுடன் புடைசூழ  காங்கிரஸில்  இணைந்துள்ளனர்.
 
பிரதேச மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தபோது,  அக்கட்சியைச் சேர்ந்த  முக்கியமான தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையிலான சில அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன்  2020ல்  பாஜகவில் இணைந்து கொண்டார்.
 
காங்கிரஸ் ஆட்சிக்கு கவிழ்ந்து தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகிறது.
 
இந்த நிலையில் பாஜக பாஜகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த பைஜ்நாத்சிங் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆனால் அவருக்கு சீட் கிடைக்காததால் மனவிரக்தி  அடைந்த அவர் மீண்டும் காங்கிரஸில் இணைய முடிவு செய்துள்ளார்.
 
இந்த நிலையில் சிவ்புரியில் இருந்து கோபாலுக்கு உள்ள 300 கிலோமீட்டர் தூரத்தை  400 கார்களில் தனது ஆதரவாளர்களுடன் சென்று திக் விஜய் சிங் , கமல் நாத் தலைமையிலான  காங்கிரஸில்  இணைந்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்