விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (19:12 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். 

 
நேற்று இரவு முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கருணாநிதியை பார்க்க அவரது இல்லத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் நோய் தொற்று ஏற்படும் என்பதால் கருணாநிதி பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. 
 
இதனால் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மதியம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கருணாநிதி உடல்நலம் குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்